பிரித்தானியாவில் மணிக்கு 70 மைல் வேகத்தில் வீசும் காற்று : சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் மணிக்கு 70 மைல் வேகத்தில் காற்று வீசும் என வானிலை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வீசும் குறித்த காற்றால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 50-60 மைல் வேகத்தில் அல்லது மணிக்கு 70 மைல் வேகத்தில் கூட வீசும் என்றும் வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனால் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு, வடமேற்கு, மேற்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் தென்மேற்கு உள்ளிட்ட பகுதிகளுக்கும், யார்க்ஷயரின் பெரும்பாலான பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 26 times, 1 visits today)