இந்தியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

புதுடில்லியில் காற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவு

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு உத்தரவு பெற்றுள்ளனர்.

பாடசாலைகளின் வகுப்புகள் இணையத்தில் நடக்கின்றன. சில பல்கலைக்கழகங்களில் அடுத்த வாரத்துக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காற்றுத் தூய்மைக்கேட்டுப் பிரச்சினையைச் சமாளிக்க வாகனப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகள் காரணமாகச் சுமார் மூன்றரை மில்லியன் சிறிய, நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்தியத் தகவல்கள் கூறுகின்றன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!