லண்டனில் கோர விபத்து: பாடசாலை கட்டிடத்தில் கார் மோதியதில் 8 வயது சிறுமி பலி

தென்மேற்கு லண்டனில் உள்ள விம்பிள்டனில் உள்ள ஆரம்பப் பாடசாலை கட்டிடத்தின் மீது கார் மோதியதில் எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
விம்பிள்டன் பகுதியில் கேம் சாலையில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை கட்டிடத்தின் மீது லேண்ட் ரோவர் கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 16 பேருக்கு துணை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆபத்தான வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 40 வயதுடைய பெண் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)