பிரதமர்மீது விமல் விமர்சனக் கணை தொடுப்பு!
புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும் என்று முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச சூளுரைத்துள்ளார்.
கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்ச இன்று சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்றுவரும் இப்போராட்டத்தின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், பிரதமர் ஹரிணி அமரசூரிய அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர் போல செயல்படுவதாகவும், கல்வி அமைச்சு பதவியை வகிக்க அவர் பொறுத்தமற்றவர் எனவும் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.
அதேவேளை, பிரதமர் பதவியில் மாற்றம் வராது, கல்வி அமைச்சு பதவியிலும் ஹரிணி அமரசூரியவே நீடிப்பார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.





