அமெரிக்காவை ஆளப்போவது ட்ரம்பா? கமலாவா? விறுவிறுப்பான தேர்தல் முடிவுகள்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
தற்போது வெளியான முடிவுகளுக்கு அமைய ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனாலாட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார். அவர் இதுவரை 230 தொகுதிகளை பெற்றுள்ளார்.
குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் இதுவரை 187 தொகுதிகளில் முன்னிலையில் பெற்றுள்ளார்.
எனினும் முக்கியமான சில மாநிலங்களின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த மாநிலங்களில் கமலா ஹாரிஸ் போட்டியிடும் குடியரசு கட்சியை ஆதரிக்கும் மாநிலங்களாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது குறித்த மாநிலங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 9 times, 9 visits today)