உக்ரைனுக்கு (Ukraine) டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகள் வழங்கப்படுமா?
உக்ரைனுக்கு (Ukraine) டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகளை வழங்க பென்டகன் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட தூரம் பயணித்து இலக்கை தாக்கும் குறித்த ஏவுகணையானது ரஷ்யாவை சமாளிக்க முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் இதுபோன்ற ஆயுதங்கள் இருப்பது விளாடிமிர் புடினை “பதட்டப்படுத்துகிறது” என்று உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்பு கூறியிருந்தார்.
இருப்பினும் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த ஜெலென்ஸ்கிக்கு இது தொடர்பில் சாதகமான பதில் வழங்கப்படவில்லை. அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு குறித்த ஏவுகணை தேவை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் CNN வெளியிட்டுள்ள செய்தியில், பென்டகன் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கினால், அமெரிக்க கையிருப்பில் எந்த எதிர்மறையான தாக்கமும் இருக்காது என்று மதிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆயுதங்களை வழங்குவது ஜனாதிபதியின் விருப்பத்தில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றங்கள் இந்த ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்க வாய்ப்பாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





