வாக்னர் கூலிப்படையின் தலைவர் படுகொலை செய்யப்படுவாரா?
வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைனின் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரைன் உளவுத்துறை தவைலர், மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ், யெவ்ஜெனி பிரிகோஜினின் கலகத் திட்டங்களை “சிறிது காலத்திற்கு” கியேவ் அறிந்திருந்து எனக் கூறினார்.
உக்ரைன் மீதான விளாடிமிர் புட்டின் முழு அளவிலான படையெடுப்பில் கூலிப்படை குழு இனி அச்சுறுத்தலாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது யெவ்கெனி பிரிகோஜின் படுகொலை செய்யப்படுவாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர், காலப்போக்கில் பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
“சாத்தியமான படுகொலை முயற்சிகள் வேகமாக இருக்காது எனவும் சரியான அணுகுமுறைகளைப் பெறுவதற்கு சில காலத்தை எடுத்துக்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.