இலங்கையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா? பிரதமர் விளக்கம்

இலங்கையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் நேற்று பாராளுமன்றத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.
“புலமைப்பரிசிலை தற்போது இரத்து செய்ய திட்டமில்லை. மாணவர்கள் அனுபவிக்கும் மன அழுத்தம் மற்றும் சிரமங்களை குறைக்க மட்டுமே நாங்கள் பரீட்சையில் மாற்றங்களை அறிமுகப்படுத்துவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
(Visited 20 times, 1 visits today)