வெற்றிநடை போடுமா இலங்கை? இன்று மோதல்!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் ODI போட்டி இன்று (22) நடைபெறுகின்றது.
கொழும்பு ஆர். பிரேமதாச RSP மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோதவுள்ளது. இதில் முதல் பலப்பரீட்சை இன்று நடைபெறுகின்றது.
ரி -20 உலகக்கிண்ணம் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியானது இலங்கை ஆடுகளம் தொடர்பான அனுபவத்தை இங்கிலாந்துக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2ஆவது ஒருநாள் போட்டி ஜனவரி 24 ஆம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜனவரி 27 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.





