பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் புட்டின் கலந்துகொள்வாரா?
பிரிக்ஸ் உச்சிமாநாடு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த மாநாட்டில் புட்டின் கலந்துகொள்வாரா என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
இம்முறை நடைபெறும் பிரிக்ஸ் மாநாடானது இயற்பியல் ரீதியாக இடம்பெறவுள்ளதாக தென்னாப்பிரிக்க தலைவர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக இந்த மாநாடு நடைபெறாத நிலையில், மெய்நிகர் வழியில் நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு புட்டினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐ.சி.சி நீதிமன்றத்தின் பிடியானை உத்தரவை எதிர்கொண்டுள்ள புட்டின் இந்த மாநாட்டில் பங்கேற்றால் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகவே இதில் புட்டின் கலந்துகொள்வாரா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.