பழி தீர்க்குமா பாகிஸ்தான்?
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று (13) நடைபெறுகின்றது.
இலங்கை நேரப்படி குறித்த போட்டி இன்று பிற்பகல் 1.45 மணியளவில் ஆரம்பமாகும்.
பங்களாதேஷ் சென்றுள்ள ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் மிர்புரில் நடந்த முதல் ஆட்டத்தில் படு தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் இடம்பெறுகின்றது.
தொடரை வெல்வதற்கான வாய்ப்பை தக்க வைக்க இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.





