இலங்கையில் பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படுமா? வெளியான தகவல்

இலங்கையில் புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அதனை தெரிவித்தார்.
மேலும், இதுவரை புதுப்பிக்கப்படாத சுமார் 2 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிப்பதற்காக புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதற்கான பணிகள் நடைபெற்று வருவதோடு, இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தப் பணி நிறைவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
(Visited 27 times, 1 visits today)