உலகம் செய்தி

ஒரு போதும் தனது மண்ணை விட்டு வெளியேற மாட்டேன் – பாலஸ்தீன அதிபர்

எவ்வாறான சவால்கள் வந்தாலும் தனது மண்ணை விட்டு வெளியேற மாட்டேன் என பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

காசா நெருக்கடி தொடர்பாக எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பலஸ்தீன ஜனாதிபதி, மீள்குடியேற்றம் செய்யப்படும் என்று கூறி அப்பகுதியிலிருந்து மக்களை அகற்றுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அமைதி மாநாடு என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டில் ஜோர்டான், கத்தார், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்,

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகியவை பங்கேற்காத நாடுகளில் உள்ளன.

மாநாட்டில் பேசிய ஜோர்டான் மன்னர் அப்துல்லா, காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து உலக மௌனம் நிலவுவதை கண்டித்துள்ளார்.

இஸ்ரேலிய உயிர்களைப் போல பாலஸ்தீன உயிர்கள் முக்கியமானது என்ற செய்தியை அரபு நாடுகளுக்கு அனுப்புவோம் என்றும் ஜோர்டான் மன்னர் குறிப்பிட்டிருந்தார்.

(Visited 16 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி