காப்பாற்றுமாறு நாமல் அழுதாரா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

கடந்த போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அழுது கொண்டே தொலைபேசியில் அழைத்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகை போராளிகளால் முற்றுகையிடப்பட்ட போது நாமல் ராஜபக்ஷ தம்மை அழைத்துக் காப்பாற்றுமாறு கூறியதாகவும் அதேவேளை இராணுவத் தளபதியையும் அழைத்ததாகவும் அமைச்சர் கூறினார்.
நாமல் ராஜபக்ஷ அன்று இருந்த நிலைமையை மறந்து இன்று தம்பட்டம் அடித்துக்கொண்டு ஜனாதிபதி பதவியை கோருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றி மக்கள் திரண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்காக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(Visited 12 times, 1 visits today)