ஜப்பான் நேட்டோ கூட்டணியில் இணையுமா? பிரதமர் விளக்கம்

நேட்டோ கூட்டணியில் சேர்வதற்குத் தற்போது எந்தத் திட்டமும் இல்லை என ஜப்பானியப் பிரதமர் Fumio Kishida தெரிவித்துள்ளார்.
ஜப்பான் அதிகாரப்பூர்வப் “பகுதி-உறுப்பினராகவும்” நேட்டோ கூட்டணியில் சேராது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் டோக்கியோவில் தொடர்பு அலுவலகம் ஒன்றை அமைக்க நேட்டோ கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது.
அதுபோன்ற அலுவலகம் முதன்முறையாக ஆசியாவில் அமைக்கப்படவிருக்கிறது. அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கிஷிடா தெரிவித்தார்.
ஒரு தனிநபர் அலுவலகத்தை அமைக்க கூட்டணி முன்மொழிந்திருக்கிறது. வட்டாரத்தில் உள்ள தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலந்து உள்ளிட்ட முக்கியப் பங்காளிகளுடன் நேட்டோ அவ்வப்போது ஆலோசனை நடத்த அலுவலகம் உதவியாக இருக்கும் என கூறப்படுகின்றது.
(Visited 12 times, 1 visits today)