செய்தி விளையாட்டு

இந்திய வெற்றியால் ஆஸ்திரேலிய அணியில் விரிசல்?

இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

முதல் போட்டியில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் முதல் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்திற்கு பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பெரிய அளவில் ரன் குவித்தது.

அது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “இது பற்றி நீங்கள் பேட்ஸ்மேன்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் எங்கள் பணியை செய்து விட்டோம்.

இனி பேட்ஸ்மேன்கள் தான் ஆட்டத்தை கொண்டு செல்ல வேண்டும்.” என பந்துவீச்சாளர்களையும், பேட்ஸ்மேன்களையும் இரண்டு குழுக்களாக பிரித்துப் பேசி இருந்தார்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியில் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என பிரிவினை இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்தது.

முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு எடுபடவில்லை.

அந்த நிலையிலும் ஜோஷ் ஹேசல்வுட் பேட்ஸ்மேன்கள் கையில் தான் போட்டி இருக்கிறது என கூறி இருந்தது முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களையும் வாயடைக்க வைத்தது.

அந்த முரண்பாடான பேச்சு ஒரு புறம் இருக்க, இரண்டாவது போட்டியிலிருந்து ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக நீக்கப்பட்டார்.

அதுவும் சந்தேகத்தை எழுப்பி இருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து இருக்கிறார்.

இது பற்றி ட்ராவிஸ் ஹெட் பேசுகையில், “இந்த சந்தேகத்தை நாம் கைவிட்டு விடலாம்.

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் நாங்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்திருக்கிறோம்.

இந்த விளையாட்டு தனிநபர்களை சார்ந்ததாகும். எனவே, பேட்ஸ்மேன்களாகிய எங்கள் சார்பாக நாங்கள் போட்டியில் முன்னிலை வகிக்க விரும்புகிறோம்.” என்றார்.

“கடந்த காலத்தில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் எந்த அளவு சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

அவர்கள் பலமுறை பேட்ஸ்மேன்களை பிரச்சனைகளிலிருந்து மீட்டு இருக்கிறார்கள்.

ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் அதிக ரன்களை குவித்து போட்டியில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

ஒரு பேட்ஸ்மேன் ஆக இதை செய்வதில் எனக்கு நிறைய பெருமை உள்ளது.

அதே சமயம் பந்துவீச்சாளர்கள் எங்களுக்காக சிறப்பாக செயல்படுவார்கள்.

எனவே, அணியில் விரிசல் ஏதுமில்லை.” என்றார் ட்ராவிஸ் ஹெட்.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி