செய்தி விளையாட்டு

பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீர் நீக்கப்படுவாரா?

பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தால், பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கௌதம் கம்பீர் நீக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் திகதி தொடங்குகிறது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கௌதம் கம்பீருக்கு, கடந்த 4 மாதங்கள் பெரிதாக சிறப்பானதாக அமையவில்லை. அணியின் பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி, சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக தொடர்ந்த இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி, நியூசிலாந்திடம் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்து வரலாற்று தோல்வி என பல வரலாற்றுத் தோல்விகளை சந்தித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு மிக முக்கியமான தொடரான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தொடரை வெல்ல தவறும் பட்சத்தில், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கௌதம் கம்பீர் நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மன் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவரான விவிஎஸ் லக்‌ஷ்மன் அவ்வப்போது இந்திய அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான பயிற்சியாளராக இளம் இந்திய அணியுடன் பயணம் மேற்கொள்கிறார். டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடன் விவிஎஸ் லக்‌ஷ்மன் தற்போது உள்ளார்.

பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

இந்த தொடர் சொந்த மண்ணில் வரலாற்று தோல்வியை சந்தித்துவிட்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவோடு உள்ள இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமின்றி, புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள கௌதம் கம்பீருக்கும் வைக்கப்பட்டுள்ள சோதனையாகவே பார்க்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி