தேவைப்பட்டால் திரும்ப வருவேன்.. – டேவிட் வார்னர் வெளியிட்ட அறிவிப்பு
இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம். எனவே, போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த தொடர் தொடங்குவதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டும் இருப்பதால் வீரர்கள் போட்டியில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறார்கள். இந்த சூழலில், வார்னர் கூறிய சம்பவம் ஆஸ்ரேலியா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சமீபத்தில் , CODE Sports என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய போது டேவிட் வார்னர் தேவைப்பட்டால், பார்டர்-கவாசகர் டிராபியில் விளையாட தயாராக இருப்பதாக கூறினார்.
இது குறித்து பேசிய அவர் ” எப்போதுமே நான் கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கிறேன். எனக்கு முக்கியமான போட்டிகளில் விளையாட தேர்வர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் நிச்சயமாக நான் எப்போது வேண்டுமானாலும் வருவேன். ஆஸ்ரேலியாக அடுத்ததாக (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடரில் விளையாடவிருக்கிறது
தேவைப்பட்டால் ஓய்விலிருந்து மீண்டும் இந்த தொடரில் நான் விளையாட வருவேன். ஆனால், நான் மட்டும் இந்த விஷயத்தை சொன்னால் போதாது. அணியின் தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் இதனை முடிவு செய்யவேண்டும். கண்டிப்பாக இந்த முடிவில் நான் இருக்கிறேன். இந்த முடிவில் இருந்து பின் வாங்கவே மாட்டேன்” எனவும் இந்தியாவுக்கு எதிராக தான் விளையாடும் ஆர்வம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி வார்னர் பேசியுள்ளார்.
வார்னர் அணிக்கு மீண்டும் திரும்பினார் என்றால் கண்டிப்பாக ஆஸ்ரேலியா அணிக்கு அது பக்கபலமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு அவர் அணியின் முக்கிய வீரராகவும் திகழ்ந்தவர். எனவே, அவர் விளையாட ஆர்வம் தெரிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டேவிட் வார்னர் கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வருத்தத்துடன் அறிவித்து இருந்தார். இந்த சூழலில், கிரிக்கெட் விதிமுறைகளின் படி அவர் திரும்பி வந்து விளையாடலாமா? என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஆனால், ஓய்விலிருந்து அதன்பிறகு கிரிக்கெட் விளையாடுவது என்பது விதிமுறைகளின்படி சத்தியம் தான்.