கனடாவை உலுக்கிய காட்டுத்தீ – இரவு பகல் தெரியாத அளவிற்கு பாதிப்பு
கனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் இரவு பகல் தெரியாத அளவிற்கு காட்டுத் தீ உலுக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரணமாக நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்தில் 15,000 குடும்பங்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிலோனா (Kelowna) என்னும் நகரில் ஏற்கனவே 2,400-க்கும் அதிகமான இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.
இன்னும் பல்லாயிரம்பேர் வெளியேறத் தயார்நிலையில் உள்ளனர். அங்கு 150,000 பேர் வசிக்கின்றனர்.
இரவைப் பகலாக்கும் அளவுக்குத் தீ பல இடங்களில் கொழுந்துவிட்டு எரிவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புகைமூட்டம் நகரை ஒரு போர்வைபோல் போர்த்தியுள்ளதாக அவர்கள் வருணித்தனர்.
இன்னும் கடுமையான காற்று வீசக்கூடும் என்பதால் நிலைமை மேலும் மோசமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிரமமான இந்தக் கோடைக்காலத்தைச் சமாளிக்கும் ஏற்பாடுகளைச் செய்துவருவதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.