அமெரிக்காவில் மீண்டும் காட்டுத் தீ – 19,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறும் நிலை
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு அருகே ஏற்பட்டுள்ள புதிய காட்டுத் தீச்சம்பவத்தில் சுமார் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது.
கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயால் 19,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.
பலத்த காற்று தீயை மேலும் தீவிரப்படுத்தியது. இதற்கு முன்னர் எரிந்த பெருந்தீயை அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.
சில மணி நேரத்தில் மேலும் ஒரு தீச்சம்பவம் ஏற்பட்டது. சுமார் 1,100 தீயணைப்பாளர்கள் அயராது உழைக்கின்றனர்.
நிலைமை குறித்து கவனத்தோடு இருக்கும்படி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 6 times, 6 visits today)