மத்திய அமெரிக்காவில் அதிகரிக்கும் காட்டுத்தீ சம்பவங்கள்!
மத்திய அமெரிக்க நாடு முழுவதும் 44 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குவாத்தமாலாவின் ஜனாதிபதி இயற்கை பேரழிவு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த தீவிபத்துகளில் 80 சதவீதமானவை மக்களால் ஏற்படுத்தப்பட்டது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
விவசாயிகள் பெரும்பாலும் தங்கள் வயல்களில் புல்லை எரிப்பதால் இவ்வாறு தீவிபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலவும் புகையிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க மூன்று மத்திய மாகாணங்களில் வகுப்புகளை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)