ஜப்பானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ ; 80க்கும் அதிகமான கட்டடங்கள் சேதம், நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

ஜப்பானின் வடக்குப் பகுதியில் காட்டுத் தீ மூண்டுள்ளது.இதில் 80க்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கானோரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காட்டுத் தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுவதாக வியாழக்கிழமை (பிப்ரவரி 27) ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்டுத் தீயின் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் எரிந்து சாம்பலானதைக் காட்டும் காட்சிகளை ஜப்பானிய செய்தி நிறுவனமான என்எச்கே ஒளிபரப்பியது.
இதுவரை 600 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டதாக அப்பகுதியின் நகராட்சி மன்றம் கூறியது.இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
வியாழக்கிழமை (பிப்ரவரி காலை) நிலவரப்படி குறைந்தது 84 கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காட்டுத் தீ மூண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
2023ஆம் ஆண்டில் ஜப்பானெங்கும் ஏறத்தாழ 1,300 காட்டுத் தீச்சம்பவங்கள் ஏற்பட்டன.