ஐரோப்பா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத் தீ! அவசரநிலை பிரகடனம்

கனடாவின் மேற்கு எல்லையிலுள்ள பிராந்தியம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் . இங்கு திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றி நிலையில் இந்த பிராந்தியம் முழுக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 36 ஆயிரம் பேர் வசிக்கும் மேற்கு கெலோனா நகரத்தில் தீ பரவுவதால் 2 ஆயிரத்து 400 வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளன.

இதே போல் எல்லோ-நைஃப் நகரத்தை நோக்கியும் தீ பரவி வருகிறது. அங்கு வசிக்கும் பலர் கார் மற்றும் விமானம் என அவசர அவசரமாக ஊரை காலி செய்து புறப்பட்டு சென்றனர்.

அங்கு வசிக்கும் 20 ஆயிரம் பேரில் 19 ஆயிரம் பேர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர். எஞ்சியுள்ளவர்களில் உதவிக்குழுவை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் அனைவரையும் வெளியேற சொல்லி சுற்றுச்சூழல் அமைச்சரான ஷேன் தாம்ப்சன் உத்தரவிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 4 ஆயிரம் வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு சுமார் 15 ஆயிரம் வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த எண்ணிக்கை 20 ஆயிரம் வீடுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டில் மட்டுமே ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. கணிக்க முடியாத வகையில் மாறி வரும் பருவநிலை, அதிக வெப்பம், இதைத் தொடர்ந்து காட்டுத்தீ மேலும் பரவலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

வான்வழி தீயணைப்பு படை தவிர பிற விமானங்களுக்கு, கெலோனா சர்வதேச விமான நிலையத்தை சுற்றி உள்ள வான்பகுதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்