துருக்கியில் பற்றி எரியும் காட்டுத்தீ – 80 பேர் பாதிப்பு – நூற்று கணக்கான மக்கள் வெளியேற்றம்

துருக்கி ஏகன் கரையில் காட்டுத்தீ பற்றி எரிவதாக தெரியவந்துள்ளது.
இதனால் அங்கு வாழும் சுமார் 900 பேர் வீடுகளைவிட்டு வெளியேறியிருக்கின்றனர்.
அந்தப் பகுதியில் மூன்றாவது நாளாகத் தீ கொளுந்துவிட்டு எரிகிறது. நாடு முழுக்க ஏற்பட்டிருக்கும் 6 காட்டுத்தீச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடுகின்றனர்.
தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
காட்டுத்தீயால் சுமார் 80 பேர் பாதிக்கப்பட்டதாகத் துருக்கியே சுகாதார அமைச்சு கூறியது.
அவர்களில் சுமார் 30 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சுமார் 1,600 ஹெக்டர் விவசாய நிலம் சாம்பலானது.
தீக்குக் காரணமானவர்கள் என்று நம்பப்படும் 7 பேர் தடுத்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
(Visited 28 times, 1 visits today)