மட்டக்களப்பு வாவியில் உலா வரும் காட்டு யானைகள்
மட்டக்களப்பு வாவியில் இரண்டு காட்டு யானைகள் ஜோடியாக நேற்று மாலை வேளயிலிருந்து (05.03.2026) உலாவித் திரிவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
மட்டக்களப்பு வாவியின் துறைநீலாவணை பகுதியிலேயே இக்காட்டு யானைகள் உலாவித்திரிவதை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறு வாவியில் உலாவும் காட்டு யானைகளை அப்பகுதி மக்கள் பார்வையிட்டு வருவதுடன், தமது குடியிருப்புக்களுக்குள் உட்புகுந்து விடுமோ என்ற அச்சத்தின் மத்தியிலும் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் துவம்சம் செய்து வந்த காட்டுயானைகள் அண்மைக்காலமாக மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து எழுவாங்கரைப் பகுதிக்கும் வந்து சேதங்களை விளைவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





