முன்னாள் காதலியின் கடிதத்தால் கணவனை கொல்ல முயன்ற மனைவி

அமெரிக்காவில் பெண் ஒருவர் போஸ்ட் கார்டு கிடைத்ததால் கணவரை கொல்ல முயன்றார்.
60 வருடங்களுக்கு முன்னர் உறவுகொண்ட பெண் ஒருவர் தனது கணவருக்கு அனுப்பிய கடிதமே இதற்கு காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பெண் தனது கணவரை மூச்சுத்திணறடிக்க முயன்றார்.
கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்த பெண் 71 வயதுடைய பெண் எனவும் இவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 52 வருடங்கள் ஆவதாகவும் கூறப்படுகின்றது.
கணவர் தாக்கப்பட்டதாகவும், எனது மனைவி என்னைக் கொல்லப் பார்க்கிறார் என்றும் பொலிஸாரிடம் வந்ததையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)