செய்தி தமிழ்நாடு

கணவன் கண் முன்னே மனைவி உயிரிழப்பு

கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் பகுதியே சேர்ந்தவர்கள் பிரகாஷ் புவனேஸ்வரி(25) தம்பதியினர்.

இவர்கள் நேற்று மாலை வண்டிக்காரனூர் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது இவர்களுக்கு முன் மாட்டு வண்டி(ரேக்ளா வண்டி) ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அதனை ஒருவர் ஓட்டியும் சென்றுள்ளார்.

அந்நிலையில் மாடு திடீரென மிரண்டு எதிர் சாலைக்கு திரும்பியதால் பின்னால் வந்த இவர்களது வாகனம் அந்த மாட்டுவண்டியின் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி பிரகாஷ் மற்றும் புவனேஸ்வரி இருவரும் கீழே விழுந்துள்ளனர். அதே சமயம் எதிர் சாலையில் வந்த இருசக்கர வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளானது.

இதில் புவனேஸ்வரிக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அடுத்து தனியார் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த ஆம்புலன்ஸ், புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

இது குறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்காட்சிகள் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 6 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி