வீடு திரும்பாத மனைவி, பிள்ளைகள்; கணவன் எடுத்த விபரீத முடிவு
மனைவி மற்றும் இரு பிள்ளைகள் வீடு திரும்பவில்லை என மனவேதனையுடன் கடிதம் எழுதி தற்கொலை நபரின் சடலம் நான்கு நாட்களுக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாலம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலம்பே, கொடல்லவத்தை பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய ஆயத்த ஆடை வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழந்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது இரண்டு பிள்ளைகளுடன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளதாகவும், பலமுறை வீட்டிற்கு வருமாறு மனைவியிடம் முறையிட்டும் நல்ல பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. .
இதற்கிடையில், மனைவி கணவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தும், அவர் பதிலளிக்காததால், பக்கத்து வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வீட்டில் இருக்கும் கணவர் குறித்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்து துர்நாறமற் சந்ததாகவும் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், பொலிசார் வந்து அந்த வீட்டை சோதனையிட்டதில், நான்கு நாட்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் சடலம் வீட்டின் அறையில் நாற்காலியில் கிடந்தது.
இதேவேளை, சடலத்திற்கு அருகில் விஷப் போத்தல் ஒன்று காணப்பட்டதுடன், இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
“என்னுடைய தவறுகளுக்கு வருந்துகிறேன், என் மீது கோபப்படாதீர்கள், என் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றேன், என் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்த பணத்தைக் கேளுங்கள். மன்னிக்கவும்.” எழுதிய கடிதத்தை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் தலங்கம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் பிரேமலதா அபேவர்தன சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக IDH வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதன்படி, ஐ.டி.எச் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஜி.எம்.எஸ்.பெர்னாண்டோவினால் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளமையினால் உடலின் திசு பாகங்களை மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க பரிசோதகர்க்கு அனுப்ப சட்ட வைத்தியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.