இலங்கை செய்தி

நிலந்தவுக்கு ஏன் தண்டனை வழங்கப்படவில்லை ?

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை கமிஷன் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சிபாரிசு செய்த தண்டனையை நிறைவேற்ற உத்தரவு வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைபாட்டுக்கு இணங்க தற்போது ஒழுக்காற்று விசாரணை ஒன்று நடைபெற்று வருவதாக நிலந்த ஜயவர்தனவின் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவருக்கு எதிராக உரிய தண்டனையை வழங்க உத்தரவு வழங்குமாறு சமூக சம நிலை அமைப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு மீதான விசாரணையின் போது இத்தகவல் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இம்மனு குறித்த விளக்கத்தை வழங்க மனுதாரர்கள் தரப்பில் ஒரு தினத்தை ஒதுக்குமாறு வேண்டியதற்கு இணங்க பெப்ரவரி 22 ஆம் திகதியை அடுத்த வழக்கு தினமாக நீதவான் அறிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை