இலங்கை செய்தி

நாமலை இளவரசர் என விளித்தது ஏன்? ஹரின் விளக்கம்!

“ நுகேகொடை(Nugegoda) கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) கட்சியின் ஆதரவாளர்களே 75 சதவீதம் பங்கேற்றனர். கூட்டத்தை நடத்துவதற்கு அக்கட்சியே முன்னின்றது. அதனால்தான் நாமல் ராஜபக்சவை(Namal Rajapaksa) இளவரசர் என விளித்தேன்.” என்று ஐக்கிய தேசியக் கட்சி(UNP) உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ(Harin Fernando) தெரிவித்தார்.

எனவே, இந்த விடயத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை எனவும், மேற்படி கூட்டத்துக்கு பங்களிப்பு வழங்க முடிந்ததை யிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில்(Colombo) இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே ஹரின் பெர்ணான்டோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் நுகேகொடை கூட்டம் வெற்றியளித்துள்ளது. இதற்கு ஆதரவளிக்க அனைவருக்கும் நன்றி. எமது நடவடிக்கை தொடரும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

நுகேகொடை கூட்டத்தில் நாமல் ராஜபக்சவை, ஹரின் பெர்ணான்டோ இளவரசர் என விளித்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. பல்வேறு வகையான மீம்ஸ்களும் பகிரப்பட்டுவருகின்றன.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!