எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படாதது ஏன்?
ஒக்டேன் 92 எரிபொருள் லீற்றருக்கு 130 ரூபாவும், ஆட்டோ டீசல் லீற்றருக்கு 107 ரூபாவும் அரசாங்கம் தற்போது வரி அறவிடுவதாக தெரியவந்துள்ளது.
மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருளின் விலை நேற்று (31) நள்ளிரவு முதல் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் இரண்டு வகையான எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
இதன் காரணமாக பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் மற்றும் பாடசாலை வேன்களின் கட்டணங்களில் மாற்றம் செய்வதில்லை என சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், நேற்று நள்ளிரவு முதல் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினாலும், பிரிமியம் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.
எவ்வாறாயினும், இலங்கையில் பொது மக்கள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளுக்காக அதிகம் பயன்படுத்தப்படும் ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் லங்கா ஆட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படாததுடன், ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 371 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
லங்கா ஆட்டோ டீசல் ஒரு லீற்றர் 363 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் தங்களுடைய எரிபொருள் விலைகளையும் திருத்தியுள்ளதாக சிலோன் ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியமைத்துள்ளதுடன், ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றரின் விலை 368 ரூபாவாகவும், ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பஸ், முச்சக்கரவண்டி, பாடசாலை வேன் கட்டணங்களை திருத்தியமைப்பதில்லை என சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதற்கிடையில், பல வகையான வரிகளுக்கு உட்பட்டு அனைத்து வகையான எரிபொருள்களும் இந்த நாட்டில் நுகர்வோருக்கு கிடைக்கின்றன.
அவற்றில் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றருக்கு இறக்கும் போது 205 ரூபா 79 சதம் எனவும் 03 வகையான வரிகள் அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உற்பத்தி வரி 72 ரூபாயும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி 3. 79 ரூபாயும், வட் வரி 54 . 64 ரூபாவும் உள்ளடங்கும், அந்த வரிகளின் மொத்த தொகை 130.43 ரூபாயாகும்.
ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 232.44 சதத்திற்கு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதுடன் சுங்க இறக்குமதி வரி உட்பட அதன் மீதான 4 வகையான வரிகளின் மொத்த தொகை 162.31 ரூபாவாகும்.
இறங்கும் போது 213 ரூபா 73 சதமாக இருக்கும் லங்கா ஆட்டோ டீசல் லீற்றரின் விலையில் 03 வகையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. கலால் வரி 50 ரூபாயும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி 3.73 ரூபாயும், வட் வரி 53 .73 ரூபாயும் சேர்ந்தது, அந்த வரிகள் மொத்தம் 107.46 ரூபாய்.