அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் மஹிந்த செய்ததை அநுரவால் ஏன் செய்ய முடியவில்லை?

“போரை முன்னெடுத்த மஹிந்த ராஜபக்சவால் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியுமென்றால் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற அநுரகுமார திஸாநாயக்கவால் அதனை ஏன் நடத்த முடியாதுள்ளது.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் TPA, நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் Mano Ganesan கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா தொடுத்தார்.

“மஹிந்த ராஜபக்சவே போரை முன்னெடுத்தார். இதனால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பில் கடும் விமர்சனம் இருந்தது. மக்கள் தம்மை விமர்சித்தபோதிலும் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அவர் நடவடிக்கை எடுத்தார்.

ஆனால் வடக்கு மக்களின் ஆதரவை பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏன்?

ஜனாதிபதி வடக்குக்குச் செல்கின்றார். சுதந்திரமாக நடக்கின்றார். செல்பி எடுக்கின்றார். இது நல்ல விடயம். இதில் எவ்வித தவறும் கிடையாது.

இப்படி மக்கள் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியால் ஏன் தேர்தலை நடத்த முடியாதுள்ளது. இதுதான் எனது கேள்வி. இந்த கேள்வி நியாயமானதுதானே” எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!