இஸ்ரேலுக்கு எதிராக யார் கையை உயர்த்தினாலும் அவர்களின் கை துண்டிக்கப்படும்!
ஹமாஸ் தலைவர் ரேத் சாத்தை (Raed Saad) படுகொலை செய்ய உத்தரவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலியப் படைகள் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிராக யார் கையை உயர்த்தி, ஐடிஎஃப் வீரர்களுக்கு தீங்கு விளைவித்தாலும், அவர்களின் கை காசாவிலும் மற்ற எல்லா இடங்களிலும் துண்டிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் அனைத்து குடிமக்களின் சார்பாக, காயமடைந்த போராளிகள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்றும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தம் அமுலில் இருக்கும் நிலையில் இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இது பலவீனமான சமாதான ஒப்பந்தத்தை பிரதிபலிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.





