அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு? வாழும் நாஸ்ட்ரடாமஸின் பகீர் கணிப்பு
வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் Allan Lichtman அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதனை கணித்துள்ளார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றி வரும் Allan Lichtman கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைக் கணித்து வருகிறார்.
கடந்த 10 தேர்தல்களில் 9 முறை இவரது கணிப்பு உண்மையாகியுள்ளது. 2016ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றி. 2020ஆம் ஆண்டு ஜோ பைடனின் வெற்றியையெல்லாம் அவர் சரியாக கணித்திருந்தார்.
இம்முறை அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்.
இது ஜனநாயகக் கட்சிக்காரர்களைக் கொண்டாட்டம் அடையச் செய்துள்ளது.
ட்ரம்ப், கமலாவிடம் தோல்வியைத் தழுவுவார் என Allan Lichtman கணித்துள்ளதை குடியரசுக் கட்சியினர் முட்டாள்தனம் என கண்டித்து வருகின்றனர்.