செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இந்தியர்களின் வாக்கு யாருக்கு?

அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தியர்களின் வாக்கு யாருக்கு? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹரிஸும், குடியரசு கட்சி சார்பில் டொனல்ட் டிரம்ப்பும் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்காக இருவரும் மாறி மாறி பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு யாருக்கு மொத்தமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

கமலா ஹரிஸ் இந்திய வம்சாவளி என்பதால் இவருக்கே வாக்களிக்க வேண்டும் என்று சில இந்திய அமைப்பினர் குரல் எழுப்பத் துவங்கியுள்ளனர்.

பல இந்தியர்கள் மற்றும் இந்து அமைப்புகளும், அமெரிக்க தேர்தலுக்கு சில அமைப்புகள் பெரும்பாலும் கமலா ஹரிஸுக்கே ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கமலா ஹரிஸ் ஜனாதிபதியால் இந்திய – அமெரிக்க உறவு மேம்படும் என்றும் பேசப்படுகின்றது.

இதனால் இந்தியர்கள் கமலாவிற்கே வாக்களிக்க வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!