இலங்கை

இலங்கை கிரிகெட் அணியின் தொடர் தோல்விகளுக்கு யார் பொறுப்பு?

கிரிக்கெட் அணியின் தோல்விக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் கிரிக்கெட் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார்.

உலகக்கிண்ண போட்டியில் இந்தியாவைிற்கு எதிராக விளையாடியபோது இலங்கை அணி தோல்வியடைந்தது. இது இரசிகர்கள் மத்தியில் இலங்கை அணியின் எதிர்காலம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க வெளியிட்டுள்ள அறிக்யைில்,   இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவரும் வருத்தமும் கவலையும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்குப் பொறுப்பானவர்கள் உரிய இடத்தில் கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டும் என்றும், பேதைகள் போல் நடந்து கொள்ளாமல், கடுமையான நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!