பிள்ளைகள் யாரிடம் பேசுகிறார்கள்? – பெற்றோர் கண்காணிக்க Instagramஇன் Teens Accounts

Instagram சிங்கப்பூரில் Teens Accounts எனும் இளையர் கணக்குகளை அறிமுகம் செய்துள்ளது.
Instagram தளத்தை நிர்வகிக்கும் Meta நிறுவனம் அதனை அறிவித்தது. 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள் அடுத்த சில மாதங்களில் இளையர் கணக்குகளில் வைக்கப்படுவர்.
எந்த வகை உள்ளடக்கங்களை இளையர்கள் பார்வையிடுகின்றனர், யாரெல்லாம் அவர்களைத் தொடர்புகொள்ளலாம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் கணக்கில் இடம்பெறும்.
அந்தக் கணக்குகள் அந்தரங்கமாக இருக்கும். தகாத வார்த்தைகள் தவிர்க்கப்படும். நாள்தோறும் ஒரு மணி நேரத்துக்கு மேல் செயலியைப் பயன்படுத்தினால் அதிலிருந்து வெளியேறும்படி தொலைபேசிக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
பிள்ளைகள் யாரிடம் பேசுகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்காணிக்கவும் செயலியில் சிறப்பு அம்சங்கள் உள்ளன.
16 வயதுக்குக்கீழ் உள்ள இளையர்கள் பெற்றோர் அனுமதியின்றி செயலியில் எந்த அம்சத்தையும் மாற்ற முடியாது.