ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமடையும் Mpox – தடுப்பூசிக்கு WHO ஒப்புதல்!

ஆப்பிரிக்க நாடுகளில் Mpox எனப்படும் குரங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகின்றது.
இதுவரை 700க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலினால் பலியாகினர்.
கடந்த வாரத்தில் மாத்திரம் 107 மரணங்கள் பதிவாகியிருந்தன.
இந்தநிலையில் குரங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை, டென்மார்க்கைச் சேர்ந்த, ‘பவாரியன் நார்டிக்’ எனும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ளது.
பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின் உலக சுகாதார ஸ்தாபனம் குறித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 63 times, 1 visits today)