அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மருத்துவ அறிக்கையை வெளியிட்ட வெள்ளை மாளிகை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) விரிவான உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் சீன் பார்பபெல்லா(Sean Barbabella), 79 வயதான ஜனாதிபதியின் இதயம் முற்றிலும் இயல்பாக உள்ளது என்று மருத்துவ அறிக்கையை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து முக்கிய உறுப்புகளும் மிகவும் ஆரோக்கியமாகவும் நன்றாகச் செயல்படுவதாகவும் தெரிகிறது என்றும் சீன் பார்பபெல்லா தெரிவித்துள்ளார்.
மினசோட்டா(Minnesota) ஆளுநர் டிம் வால்ஸ்(Tim Walz) உட்பட ஜனநாயகக் கட்சியினர், டிரம்பின் வயது குறித்த கவலைகளுக்கு மத்தியில் மருத்துவ முடிவுகளுக்காக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.




