லண்டனில் தோள்களில் சுமந்து செல்லப்படும் வெள்ளை நிற சவப்பெட்டி – உருக வைத்த விழிப்புணர்வு
லண்டன் நகரின் தென் கிழக்கு பகுதியில் உள்ள இளைஞர் மையமொன்றில், தோள்களில் சுமந்து செல்லப்படும் வெள்ளை நிற சவப்பெட்டியொன்று
இறுதிச்சடங்கு போன்று தெரிந்தாலும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கலை நிகழ்வாகும் என சமூக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்த சவப்பெட்டியின் உள்ளே, இரத்தக் கறைகள் படிந்த கத்தியின் வடிவில் உருவாக்கப்பட்ட பெரிய சிற்பமொன்று வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கத்தியின் மேல் லண்டன் நகரின் skyline வடிவம் செதுக்கப்பட்டிருப்பது காட்சியை மேலும் அதிர்ச்சியூட்டும்வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கலைப்பணி, இளைஞர்களிடையே அதிகரித்து வரும் கத்திக்குற்றங்களை நினைவூட்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த உணர்ச்சிபூர்வமான தருணம், கத்திக்குற்றங்களால் உயிரிழக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை நினைவூட்டும் வகையில் அமைந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இந்த கலைத்திட்டம் “Re-claim” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பல்துறை கலைஞரான Eugene Ankomah உருவாக்கிய ஒரு சமூக விழிப்புணர்வு முயற்சியாகும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், “தெருக்களில் இழக்கப்பட்ட” இளைஞர்களின் வாழ்க்கையை சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாகும்.
இன்றைய சூழலில், இளைஞர்கள் கத்திக்குற்றங்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பல சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர். இதனைத் தடுக்கும் நோக்கில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாக இருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த கலை நிகழ்வின் மூலம், கத்திக்குற்றங்களால் ஏற்படும் துயரங்களையும் அதன் சமூக விளைவுகளையும் மக்கள் நேரடியாக உணர வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் நோக்கமாகும். அதனால், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முக்கியமான முயற்சியாக “Re-claim” கலைத்திட்டம் பார்க்கப்படுகிறது.





