மூன்றாம் போர் ஒன்று வெடித்தால் மக்கள் பாதுகாப்பை தேடி எங்கு செல்வார்கள்?
காசாவில் இஸ்ரேலின் மோதல் ஈரானுடனான பிராந்தியப் போராக வளர்ச்சியடைந்து வருகிறது, ஆப்பிரிக்காவில் தொடர்ச்சியான உள்நாட்டுப் போர்கள் வெளிவருகின்றன
அதேபோல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான படையெடுப்பு குறைவதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை. விளாடிமிர் புட்டினின் நலிவடைந்து வரும் ராணுவத்துக்கு உதவ வடகொரியா 10,000 ராணுவ வீரர்களை அனுப்பும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
பெருகிவரும் போர்களை தொடர்ந்து சில வல்லரசு நாடுகள் பிற நாடுகள் மீது செல்வாக்கு செலத்தி வருவதையும் அதிகரித்துள்ளன.
சீனா ஆப்பிரிக்க போர் மண்டலங்கள் முழுவதும் தனது செல்வாக்கை விரிவுபடுத்துகிறது, அதே நேரத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்வதன் ஊடாக செல்வாக்கு செலுத்த முற்பட்டுள்ளது.
இவ்வாறாக உலக நாடுகள் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் வெடித்துள்ள நிலையில் மூன்றாம் போர் ஒன்று உருவாகுமானால் பாதுகாப்பான நாடு எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சில நாடுகள் மோதலில் இருந்து பாதுகாப்பான புகலிடங்களாக தனித்து நிற்கின்றன, அவற்றில் ஒன்றுதான் நியூசிலாந்து, பிஜி, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, சிலி உள்ளிட்ட சில நாடுகள் காணப்படுகின்றன.
ஆனால் இந்த நாடுகளில் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன. ஆகவே நாடுகள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாத ஒன்றாக மாறி வருகிறது.