இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும்? வெளியான தகவல்!
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையே சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளுக்கும் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைய இயக்குநர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





