அரசியல் இலங்கை

வடக்கில் இருந்து ராணுவம் எப்போது வெளியேறும்?

“ வடக்கு, கிழக்கில் போதைப்பொருளுக்கு இராணுவம்தான் பிரதான காரணம். எனவே, அங்கிருந்து இராணுவம் எப்போது வெளியேற்றப்படும்.” –

இவ்வாறு தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமைச்சர் சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திர சேகர், வடக்கு, கிழக்கின் கல்வி நிலை மற்றும் போதைப்பொருள் மாபியா பற்றி கருத்துகளை வெளியிட்டார்.

இதன்போது எழுந்த கஜேந்திரகுமார் எம்.பி.,

“ வடக்கில் கடந்த ஏழு மாதங்களாக கல்வி நிலை மேம்பட்டுள்ளது என சொன்னீர்கள், இதனை ஆதரப்பூர்வமாக வெளிப்படுத்துங்கள்.

போதைப்பொருளுக்கு இராணுவம்தான் பிரதான காரணம். இராணுவம் எப்போது வெளியேறும்” என்று கேட்டார்.

இராணுவம் வெளியேற்றம் குறித்து அமைச்சர் நேரடி பதிலை வழங்கவில்லை.

அதேவேளை இராணுவம், பொலிஸ் போதைப்பொருள் விடயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டதை வரவேற்கின்றேன் என்று என்று கஜேந்திரகுமார் எம்.பி. மீண்டும் குறிப்பிட்டார்.

இராணுவத்தை பொறுப்புக்கூற வைக்காமல், மாபியாக்களை ஒழிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,

” ஒட்டுமொத்த இராணுவம் மற்றும் ஒட்டுமொத்த பொலிஸார்மீது நான் பழிசுமத்தவில்லை. ஓரிருவரை பற்றிதான் குறிப்பிடுகின்றேன்.”என்றார்.

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!