WhatsAppஇல் விரைவில் வர இருக்கும் அப்டேட்!

ஹேக்கர்கள் மற்றும் மோசடியாளர்களிடம் இருந்து பயனர்களை பாதுகாக்கும் வகையில் வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
வாட்ஸ் அப் வீடியோ காலின்போது அதனை ரெக்கார்ட் மற்றும் மார்பிங் செய்து பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் வீடியோ கால் சேவையில் புதிய மாற்றத்தை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வருகிறது.
அதன்படி, இனி வீடியோ கால் அழைப்பு வரும்போது முதலில் ஆடியோ இணைக்கப்படும், பயனர் விரும்பினால் மட்டுமே வீடியோவை திரையில் காணும் வகையில் புதிய அப்டேட் செய்யப்படவுள்ளது.
தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ள இந்த முயற்சி விரைவில் அறிமுகம் செய்யப்படுமென வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)