விரைவில் 35 கையடக்க தொலைபேசிகளில் தடை செய்யப்படும் WhatsApp
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான யூஸர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி மற்றும் பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்-ஆக இருந்து வருகிறது வாட்ஸ்அப். யூஸர்களின் வசதிக்காக மிகவும் பயனுள்ள பல புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்-ல் அப்டேட்டாக தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகிறது.
ஆனால் அதே நேரம் தனது பல முக்கிய புதிய அம்சங்களை சப்போர்ட் செய்ய முடியாத சில பழைய டிவைஸ்களுக்கான சப்போர்ட்டை வாட்ஸ்அப் நிறுத்தி விடுகிறது. இந்த வகையில் ஸமிஅப்தல் வெளியாகி இருக்கும் அறிக்கைகளின்படி, அடுத்து வரவிருக்கும் வாரங்களில் சுமார் 35-க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு மற்றும் iOS டிவைஸ்கள் வாட்ஸ்அப்பிற்கான ஆதரவை இழக்க உள்ளன. அதாவது விரைவில் இந்த 35 ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் டிவைஸ்களில் WhatsApp வேலை செய்யாது.
ஸ்மார்ட்போன்களில் இந்த மெசேஜிங் ஆப் இயங்க குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகளை ஒரு டிவைஸ் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அளவுகோலை வாட்ஸ்அப் வைத்துள்ளது. வழக்கமான அடைப்படையில் இதனை சரி பார்த்து ஒருசில குறிப்பிட்ட டிவைஸ்களுக்கான சப்போர்ட்டை நிறுத்துவதை வாட்ஸ்அப் வழக்கமாக வைத்துள்ளது. நிறுவனத்தின் இந்த விதிகளின்படி ஆண்ட்ராய்டு டிவைஸ் என்றால் அதில் வாட்ஸ்அப் இயங்க 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷன்களை இயக்க கூடிய Android டிவைஸ் தேவை.
இதேபோல் ஐபோன் என்றால் வாட்ஸ்அப் இயங்க iOS 12 வெர்ஷன் அல்லது அதற்கு பிந்தைய iOS வெர்ஷனில் இயங்க கூடிய ஐபோன் மாடல் தேவை. அந்த வகையில் விரைவில் வாட்ஸ்அப் சப்போர்ட்டை இழக்க போகும் டிவைஸ்களின் பட்டியலை கீழே பார்க்கலாம்… இந்த பட்டியலில் சாம்சங், எல்ஜி மற்றும் சோனி போன்ற பிராண்டுகலின் மொபைல்கல் இடம்பெற்றுள்ளன.
விரைவில் வாட்ஸ்அப் சப்போர்ட்டை இழக்க உள்ள சாம்சங் மொபைல்கள்:
– சாம்சங் கேலக்ஸி ஏஸ் பிளஸ்
– சாம்சங் கேலக்ஸி கோர்
– சாம்சங் கேலக்ஸி எக்ஸ்பிரஸ் 2
– சாம்சங் கேலக்ஸி கிராண்ட்
– சாம்சங் கேலக்ஸி நோட் 3
– சாம்சங் கேலக்ஸி எஸ்3 மினி
– சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஆக்டிவ்
– சாம்சங் கேலக்ஸி எஸ்4 மினி
– சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஜூம்
மோட்டோரோலா பட்டியல்:
– மோட்டோ ஜி
– மோட்டோ எக்ஸ்
ஹூவாய் (Huawei) பட்டியல்:
– ஹூவாய் அசென்ட் பி6
விளம்பரம்
– ஹூவாய் அசென்ட் ஜி525
– ஹூவாய் சி199
– ஹூவாய் ஜிஎக்ஸ்1எஸ்
– ஹூவாய் ஒய்625
சோனி பட்டியல்:
– சோனி எக்ஸ்பீரியா இசட்1
– சோனி எக்ஸ்பீரியா இ3
எல்ஜி பட்டியல்:
– எல்ஜி ஆப்டிமஸ் 4 எக்ஸ் எச்டி
– எல்ஜி ஆப்டிமஸ் ஜி
– எல்ஜி ஆப்டிமஸ் ஜி ப்ரோ
– எல்ஜி ஆப்டிமஸ் எல்7
ஆப்பிள் பட்டியல்:
– ஐபோன் 5
– ஐபோன் 6
– ஐபோன் 6 எஸ்
விளம்பரம்
– ஐபோன் 6 எஸ் பிளஸ்
– ஐபோன் எஸ்இ ஃபர்ஸ்ட்-ஜென்
மேற்கண்ட ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் இயங்கும் சாஃப்ட்வேர் வெர்ஷனை நீங்கள் settings – about phone – software version ஆப்ஷனுக்கு சென்று சரிபார்த்து கொள்ளலாம். ஐபோன் யூஸர் என்றால் General – settings – About iPhone சென்று சரிபார்த்து கொள்ளலாம்.