உலகின் சில நாடுகளில் செயலிழந்த வாட்ஸ்அப் : பயனர்கள் முறைப்பாடு!
வாட்ஸ்அப் உலகளாவிய செயலிழப்பை நேற்று (03.04) எதிர்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட் பல நாடுகள் செயலிழப்பை எதிர்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி டவுன் டிடெக்டரில் 10,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், சில பயனர்கள் இது தொடர்பில் X வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.
செயலிழப்பை எதிர்கொள்ளும் பயனர்களின் அதிகரிப்பைத் தொடர்ந்து, WhatsApp இன் அதிகாரப்பூர்வ X தளத்தில் சிக்கல்களை சரிசெய்ய பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
“இந்தியாவில் 20,000 க்கும் மேற்பட்ட பயனர்கள், யுனைடெட் கிங்டமில் சுமார் 46,000 மற்றும் பிரேசிலில் 42,000 க்கும் மேற்பட்ட பயனர்களும் இயங்குதளத்தில் சிக்கல்களை எதிர்கொண்டதாக முறைப்பாடு அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.