மஹிந்தானந்தவின் கேரம் போர்டு வழக்கில் என்ன நடக்கும்?
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோரை சாட்சியமளிக்காமல் விடுதலை செய்யுமாறு அவர்களது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 9ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (01) அமல் ரணராஜா, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மகேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
(Visited 4 times, 1 visits today)