பிரித்தானியை தாக்கும் மூளைக்காய்ச்சல் – மென்பி உறுதி, மக்களிடையே அச்சம் அதிகரிப்பு
இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் பரவியுள்ள மூளைக்காய்ச்சலுக்குக் காரணமான கிருமி வகை “மூளைக்காய்ச்சல் பி (MenB).”
என பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு முகமை (UKHSA) உறுதிப்படுத்தியுள்ளது.
மென்பி தற்போது பிரித்தானியாவில் அதிகம் காணப்படும் பக்டீரியா மூளைக்காய்ச்சல் வகையாக இருந்து, 80%க்கும் மேற்பட்ட தீவிர தொற்றுகளுக்குக் காரணமாக உள்ளது.
இந்த தொற்று குறித்து பொதுமக்களுக்கு தகவல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கவலைகள் எழுந்துள்ளன. முதல் பாதிப்புகள் பதிவான பின்னர் ஒரு நாள் கழித்து மட்டுமே தகவல் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த விமர்சனங்களை பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு முகமை மறுத்துள்ளது. நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பரவலில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆழ்ந்த துயரத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூளைக்காய்ச்சல் என்பது மூளையை சுற்றியுள்ள பாதுகாப்பு சவ்வுகளில் ஏற்படும் தீவிர தொற்று ஆகும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இது ஆபத்தானதாக மாறக்கூடும்.





