சிங்கப்பூரில் தாயை அழைத்த மகனுக்கு தந்தை செய்த செயல்
சிங்கப்பூரில் மகனைக் கழிப்பிடத்தில் சங்கிலியால் கட்டிப்போட்ட தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
53 வயது தந்தை 11 வயது மகனைத் துன்புறுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார். மனைவியை விவாகரத்துச் செய்த பிறகு மகனுடன் அந்நபர் வாழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி மகன் தாயாருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியதை அறிந்த தந்தை கோபமடைந்துள்ளார்.
தாயாரைத் தொடர்புகொள்ளக்கூடாது என்று மகனிடம் தந்தை கூறியிருக்கிறார். கோபத்தில் அவர் மகனை அறைந்தார். அது மகனின் காதுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது.
பின்னர் மஞ்சள் நிற ரப்பர் குழாயைப் பயன்படுத்தி மகனை அடித்தார். சிறுவனின் தாயார் அவரை KK மகளிர், சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மகனுக்குக் காயம் ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்ட தந்தை, இதற்கு முன்னரும் மகனை அடித்துள்ளதாக கூறப்படகின்றது.
அவர் சங்கிலியைப் பயன்படுத்திக் கழிப்பறையில் உள்ள இரும்புக் கம்பியில் மகனைக் கட்டிப்போட்டது விசாரணையில் தெரியவந்தது.
பொய் கூறியமை, வீட்டுப்பாடம் செய்யாதது, தாயைத் தொடர்புகொண்டது ஆகியவற்றுக்குத் தண்டனையாக அவர் அவ்வாறு செய்தார். மூன்று முறை அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டது.