செய்தி விளையாட்டு

சிஎஸ்கேவின் மெகா ஏலம் பிளான் என்ன?

ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி சார்பாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான டேவான் கான்வேவை ஆர்டிஎம் கார்டு பயன்படுத்தி வாங்கவும் நிர்வாகிகள் பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட வீடியோவில், வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நம்புகிறேன்.

அதனால் எங்கு எனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேனோ, அதே இடத்தில் முடிக்க விரும்புகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை சிஎஸ்கேவில் தான் தொடங்கியது.

என்னுடைய கடைசி காலமும் சிஎஸ்கேவில் தான் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறியிருந்தார்.

அதற்கான சூழல் அஸ்வினுக்கு அமைந்துள்ளது. ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த அஸ்வின், தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அஸ்வினை வாங்குவது எளிதாக இருக்காது. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஃப் ஸ்பின்னர்களின் எண்ணிக்கையே குறைவாக தான் உள்ளது.

இதனால் தரமான ஆஃப் ஸ்பின்னரை வாங்க ஐபிஎல் அணிகள் முட்டி மோதும் என்று பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட சிலர் தான் மெகா ஏலத்தில் இருக்கிறார்கள்.

இதனால் அஸ்வினை வாங்க குறைந்தபட்சம் ரூ.8 கோடி வரை செலவு செய்ய வேண்டிய தேவை வரலாம்.

ஆனால் ஒவ்வொரு முறையும் அஸ்வினின் பெயர் ஏலத்திற்கு வரும் போது, சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் ரூ.5 கோடிக்கு மேல் ஏலத்தொகை சென்றால், அப்படியே போட்டியில் இருந்து விலகிவிடுவார்கள்.

ஆனால் இம்முறை அஸ்வினை வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் தீவிரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு உதவியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி டேவான் கான்வேவை குறைந்த தொகைக்கு வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் தீவிரமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

கடந்த முறை டூ பிளசிஸை ஆர்டிஎம் கார்டு மூலம் குறைந்த தொகைக்கு வாங்கியதை போல், இம்முறை டேவான் கான்வேவை வாங்க சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது.

அதேபோல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, மிட்சல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோரையும் வாங்க சிஎஸ்கே முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி